எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை 2002 நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் கல்குடா பகுதியின் முதல் பொது வைத்திய நிபுணர் எஸ்.ஏ.பரீட் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (22) ஆம் திகதி அவ்வமைப்பின் தலைவர் ஏ.ஏ.இம்தியாஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் வைத்திய நிபுணர் எஸ்.ஏ. பரீட் அவர்களுக்கு அவ்வமைப்பின் உறுப்பினர்கள் நினைவுச்சின்னத்தினை வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு பிரதேசத்திலுள்ள ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.
கல்குடா பகுதியில் முதன்முறையாக பொது வைத்திய நிபுணராக தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.ஏ.பரீட் வாழைச்சேனை பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் 2002 நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.