இன்று மன்னருக்கு விஜயம் செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் தாழ்வுபாடு பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் பொருட்டு கேஸ் அடுப்புக்களையும் கேஸ் சிலிண்டர்களையும் வழங்கி வைத்தார் .
இந் நிகழ்வில் மன்னார் நகரசபை உறுப்பினர் திரு.ரிசேர்ட் ஜனாப் அலியார் சாபீர் மற்றும் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்
தெரிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு தலா 10500/= ரூபா பெறுமதியான மேற்படி உபகரணங்கள் இன்று கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு.