வைத்தியசாலை நிருவாகமே பொறுப்புக் கூறவேண்டும்.
அட்டாளைச்சேனை-08 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மனநல வைத்திய பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென கானாமல் போயுள்ளார். அவரை தேடி அவரது குடும்பத்தினர் அலைந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர் கடந்த 17.12.2018ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் எனவும் அவரை நேற்று (19) மாலை பார்க்கச் சென்ற போது அவரைக் காணவில்லை என வைத்தியசாலை தரப்பினால் சொல்லப்பட்டது எனவும் அவரது மனைவி தெரிவிக்கிறார்.
இவ்வாறான பதில் வைத்தியசாலை நிருவாகத்துக்கு பொறுப்பான பதிலல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இமாமுத்தின் என்பவரது மனைவி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
ஆகவே,இவரை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி 0767065325 , 0754848942 இலக்கத் துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.