பறிபோனது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவி..!

எம்.எம்.நிலாம்டீன்-

ம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.ஜெவ்பர் கடந்த இரவு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது ராஜினாமா கடித்தை கையளித்துள்ளார்.

பிரதி தவிசாளர் ஜெவ்பர் என்பவர் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலப்பையின் சகோதரரர் ஆவார் .இவர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அதாவுல்லா காங்கிரஸ் அணியில் போட்டியிட்டு ஹக்கீம் காங்கிரஸ் அணியிடம் போட்டியிட்ட வேட்பாளரிடம் தோல்வி கண்டவர் .ஆனாலும் அதாவுல்லா காங்கிரஸ் அணிக்கு கிடைத்த போனஸ் ஆசனம் மூலம் உறுப்பினராக நியமனம் பெற்றவர். குலுக்கு சீட்டின் மூலமாக பிரதி தவிசாளராக நியமனம் பெற்றார்.
கடந்த மாதங்களாக உதுமாலப்பைக்கும் அதாவுல்லாக்குமிடையில் ஒரு பனிப்போர் நடந்து வருகின்றது,அந்த பனிப்போரின் உச்ச கட்டம் இந்தப் பதவி பறிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆட்சியை எடுத்துக் கொண்டால் 18 உறுப்பினர்கள் கொண்ட சபைக்கு ஹக்கீம் காங்கிரஸ் அணி-7 ,அதாவுல்லா காங்கிரஸ்-6,ரிசாத் காங்கிரஸ்-3 ,ஐதேக - 1 ,மஹிந்தரின் மோட்டு-1, ஐதேக 1 ஆகிய ஆசனங்கள் பெற்றிருந்தார்கள். அட்சி அமைப்பதற்கு குறைந்தது 9 ஆசனங்கள் வேண்டும்.
அந்த அடிப்படையில் தற்போதைய ஆட்சி என்பது ஹக்கீம் காங்கிரஸ் அணி கொண்ட-7 உறுப்பினர்களும், ஐதேக-1 உறுப்பினரும் , மஹிந்தரின் மோட்டு உறுப்பினர்-1,ஆகிய = 9 ஆசனங்கள் கொண்ட ஆட்சி நடைபெற்று வருகின்றன.
ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆட்சியை அதாவுல்லாஹ் நினைத்தால் மிகவும் சிம்பலாக கைப்பற்றி இருக்கலாம். அதாவது அதாவுல்லாவின் 6 ஆசனங்களும், ரிசாத் அணியின் 3 ஆசனங்களும் இணைந்து 9 ஆசனங்கள் கொண்ட ஆட்சியை அமைத்திருக்கலாம். ஆனால் அதாவுல்லாஹ் அதை விரும்பவில்லை .காரணம் அம்பாறையில் ரிசாத் கால் பதிப்பதை அதாவுல்லாஹ் ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் அதாவுல்லாவின் இந்த சின்னத்தனம் குறுநிலமன்னர் நினைப்பு எண்ணம் அதாவுல்லாவின் அரசியலுக்கு ஆப்பாக அமைந்து விட்டது ..
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை அதாவுல்லா அமைத்துக் கொள்ளலாம். எங்களுக்கு எந்தவொரு பதவியும் வேண்டாம் நாங்கள் முழு ஆதரவு தருகின்றோம் என்று அமைச்சர் ரிசாத் முயன்ற வரை முயன்று பார்த்தார் .அதாவுல்லாஹ் அதை தட்டிக் கழித்து எட்டி உதைத்து விட்டார். ஆனால் அதாவுல்லாவின் இந்த முடிவை இந்த தலைக் கணத்தை ஒரு போதும் உதுமாலப்பை விரும்பவில்லை.ரிசாத் அணியுடன் இணைந்து சபையைக் கைப்பற்றுவோம் என்று உதுமாலப்பை விரும்பினார்.அதாவுல்லா விரும்பவில்லை.இந்த மோதலே அதாவுல்லாவுக்கும் உதுமாலப்பைக்கும் ஒரு விரிசலை இடைவெளியை ஏற்படுத்தியது. அந்த பனிப்போர் இருவரும் வெவ்வேறு துருவம் என்ற நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.

பிரதி தவிசாளர் ஜவ்பர் ஏற்கனவே திகதி இடப்படாமல் ராஜினாமா கடிதம் ஒன்றை அதாவுல்லாஹ்விடம் கொடுத்துள்ளதால் அந்தக் கடிதத்தில் திகதி இட்டு எனது ராஜினாமா கடிதத்தை நீங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதி தவிசாளர் ஜவ்பர் அதாவுல்லாஹ்விடம் தெரிவித்து விட்டாராம். இது குறித்து ஜவ்பரை தொடர்பு கொண்ட போது அவர் தொடர்புக்கு வரவில்லை . ஜவ்பரை தொலைபேசி தொடர்பு கொள்வதில் எப்போதும் சிக்கலே,அவர் தொலைபேசிக்கு பதில் அளிப்பதில்லை..

இது குறித்து முன்னாள் அமைச்சர் உதுமாலப்பையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அதாவுல்லாஹ் கட்சித்தலைவர் பிரதி தவிசாளர் பதவி என்பது அவர் கட்சி ஊடாக வழங்கப்பட்டது கொடுத்ததை மீளக் கேட்டார் .கொடுத்து விட்டார் ..அவ்வளவுதான் என்றார் .
இதேவேளை அட்டாளைச்சேனை சபையில் அதாவுல்லாஹ் கட்சி சார்பாக போனஸ் நியமனம் செய்யபட்ட மேலும் பெண் உறுப்பினர் ஒருவரிடமும் அதாவுல்லாஹ் ராஜினாமா கடிதம் பெற்றுள்ளார். இரண்டு இடத்திற்கும் அதாவுல்லாஹ் ஒலுவில் கிராமத்தில் இருந்து 2 நியமனம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -