இன, மத பேதமின்றி குபா விளையாட்டுக்கழகத்தினால் உபகரணங்கள் வழங்கி வைப்பு



S.சஜீத்-

மூக எழுச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக "வெற்றிக்கான எங்கள் முயற்சி" என்ற தொனிப்பொருளில் இன, மத பேதமின்றி குபா விளையாட்டுக்கழகத்தினரால் ஆறாவது தடவையாக இவ்வருடமும் வரிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் குபா இளைஞர் சமூக எழுச்சி திட்டத்தின் கீழ் வறிய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (23-12-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் சுமார் 240 வரிய குடும்பத்தினைச் சேர்ந்த மாணவர்கள் காததான்குடி, காங்கயேனோடை, பாலமுனை, ஒல்லிக்குளம் மற்றும் ஆரையம்பதி ஆகிய இடங்களில் இருந்து குறித்த பகுதி பாடசாலை அதிபர்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான 2019ம் ஆண்டு கல்வி பயில்வதற்குத் தேவையான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது பல ஹிந்து சமயத்தினை சார்ந்த மாணவர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இந் நிகழ்வானது குபா விளையாட்டுக் கழக (தலைவர்) எம்.எம். சுஜாத் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு எம்.பீ.எம். சம்ஹான் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றதோடு இதில் பிரதம அதிதியாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி (OIC) மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் (SLEAS), கிராம உத்தியோகத்தர் மற்றும் அதிபர்கள் உற்பட ஊர் பிரமுகர்கள், சமூக சேவை ஆர்வளர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இக்கற்றல் உபகரணங்களானது குபா விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் அயராத முயற்சியினாலும் பல தணவந்தர்கள், நண்பர்களின் நிதி அன்பளிப்பின் மூலம் வழக்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -