சம்பூர் அபிவிருத்திக்காக சிங்கப்பூரில் ஒப்பந்த உடன்படிக்கை கைச்சாத்து



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள சம்பூர் அபிவிருத்திக்காக சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளை கொண்டு பாரிய திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தமானது சிங்கப்பூரில் வைத்து இன்று (19) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவுக்கும் சிங்கப்பூர் பைன் கெபிடல் குழுமத்தின் நிறுவனத்துக்குமிகையில் இடம் பெற்றது.
சிங்கப்பூரில் பல முதலீட்டாளர்களைக் கொண்ட இவ் நிறுவனத்தின் ஊடாக இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டங்களில் கிழக்கின் மிகப் பிரதான முக்கிய திட்டம் சம்பூரில் மேற்கொள்ளப்படுவது இதுவே முன்னிலை வகிக்கிறது என ஆளுனரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் முதலீட்டுக்கான ஒப்பந்த கைச்சாத்திடலில் கிழக்கு மாகாண ஆளுனரின் தலைமையில் மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத்அபயகுணவர்தன, மாகாண உள்ளூராட்சி முதலமைச்சர் அலுவலக செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, இணைப்புச் செயலாளர் நிமல் சோமரட்ன, கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் ஹஸன் அலால்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -