நியமனத்தை வழங்காது ஏமாற்றும் நல்லாட்சி அரசாங்கம்...

ஹஸ்பர் ஏ ஹலீம்-

டந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரச பாடசாலைகளில் நிலவிய 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்ப அரச வர்த்தமானி மூலம் நாடளாவிய ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

ஆனாலும் இற்றை வரைக்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் சங்கம் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அரச பாடசாலைகளின் விளையாட்டு துறையை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்கள் இத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி விண்ணப்பங்களினை விளையாட்டு துறையில் தேசிய, மாகாண ரீதியில் சாதனை புரிந்த விளையாட்டு வீர வீராங்கனைகளிடமிருந்து கோரி இருந்தார்கள்.

2017 ம் வருடம் நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகமை தேர்வு என்பனவற்றையும் கல்வியமைச்சு நடாத்தி அதன் மூலம் 3850 பேரினை தெரிவு செய்து 2018 ம் வருடம் ஜூன் மாதம் நியமன பெயர்பட்டியலினை மாகாண ரீதியில் வெளியீடு செய்திருந்தது.

நியமன பெயர்பட்டியல் வெளியீடு செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் நியமனம் வழங்கபடாமல் உள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைக்கு முன்னர் மாகாணசபைகளை காரணம் காட்டி நியமனத்தை இழுபறி நிலைக்கு கொண்டு வந்திருந்தாலும் அரசியல் குழப்பநிலைக்கு பின்னர் குறித்த நியமன தாமதத்திற்கு நாட்டின் ஜனாதிபதியே காரணம் என கல்வியமைச்சர் அகில விறாஜ் காரியவசம் அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

காரணங்களை காட்டி இழுபறி நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இந் நியமனத்தால் 3850 தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மனரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் தாங்கள் ஏற்கனவே செய்த தொழில்களை விட்டும் பாதிப்படைந்துள்ளார்கள்.

தெரிவு செய்யப்பட்ட 3850 பேரினையும் நம்பி 3850 குடும்பங்கள் காத்திருக்கின்றன.

குறித்த நியமனத்தை நம்பி பல திருமணம் முடித்த தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு பெரும்பான்மை கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்திருந்தாலும் தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய முண்ணனியினரே ஆட்சி அமைத்துள்ளார்கள்.

கடந்த ஆட்சி காலத்தில் கூறியதை போன்று இந்த ஆட்சிக் காலத்திலும் குறித்த நியமனத்தை வழங்காது காரணங்களை கூறுவார்களாயின் தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படும்.

நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டு அன்றாடம் வாழ்வியல் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு தற்போதைய அரசாங்கம் விரைவான தீர்மானத்தினை மேற்கொண்டு நியமனத்தை வழங்க வேண்டும்.

இழுபறி நிலையும், காரணம் கூறுதலும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விளையாட்டுதுறையில் சாதனைபடைத்த வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை ஜனவரி மாதத்திற்குள் தற்போதைய அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -