சாய்ந்தமருது தனியான நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தலை சாய்ந்தமருது - மாளிகைக்காடுமக்கள் மிகவிரைவில் எதிர்பார்க்கின்றனர்.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு சுயேற்சை அணியினரின் பகிரங்க அறிக்கை
டந்தஉள்ளுராட்சிதேர்தலில் சாய்ந்தமருது - மாளிகைக்காடுமக்களின் ஏகோபித்தஅரசியல் அதிகாரத்தை ஜனநாயகரீதியாகப் பெற்ற சுயேற்சைக்குழுவினராகியநாங்கள் கடந்தபெப்ரவரிமாதம் 10ஆம் திகதியிலிருந்து இன்றுவரை தனியான நகரசபைக்கான போராட்டத்தில் பலஅதிகாரங்களையும்,பல்வேறு இழப்புக்களையும் சந்தித்தநிலையில்,தனியானநகர சபை என்ற இலக்கிற்காகமாத்திரம் தங்களை முழுமையாக அர்ப்பணித்து இன்று வரை சாய்ந்தமருது தனியான நகரசபைக்கான போராட்டத்தில் மக்களின் ஆணையை உறுதிப்படுத்துவதோடு,தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பின்வரும் விடயங்களைமுன்வைக்கவிரும்புகின்றோம்.

01. சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபையை இலக்காகக் கொண்ட சாய்ந்தமருது–மாளிகைக்காடு சுயேற்சைக்குழு,பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் எனைய சமூகஅமைப்புக்களுடனும்,பொதுமக்களுடனும் இணைந்துஉள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரை பலதடவைகள் சந்தித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியான நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவிருந்த இறுதிக்கட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்டஅரசியல் அசாதாரண சூழ்நிலைகாரணமாக தடைப்பட்டது யாவரும் அறிந்தவிடயமாகும்.

02. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாய்ந்தமருதுக்கான தனியானநகரசபைக் கோரிக்கையைமுன்னெடுத்துச் செல்வற்கு துணைநின்ற கட்சிகளான மு.கா மற்றும் அ.இ.ம.கா ஆகியன தற்போது அரசியல் அதிகாரத்தில் தங்களது உச்சநிலையை அடைந்திருக்கின்றது. இந் நிலையில் எமது பிரதேச மு.காவின் மூத்தபாராளுமன்றஉறுப்பினர் ஒருவர் உள்ளுராட்சிமாகாணசபைகள் இராஜாங்கஅமைச்சராக நியமனம் பெற்றிருப்பதும் எங்களுக்கு சாதகமான ஒருநிலையினை தோற்றுவித்திருக்கின்றபோதிலும்,கடந்தகாலங்களில் மேற்படிசம்பந்தப்பட்ட அமைச்சர்; எங்களாலும்,பள்ளிவாசல்,பொதுமக்கள்,கொழும்புவாழ் எமது உறவுகளாலும் மேற்கொள்ளப்பட்ட தனியான நகரசபைக்கான முன்னெடுப்புக்களை முறியடிப்பதில் பாரியபங்கபளிப்புச் செய்துள்ளமையினையும் மறுப்பதற்கில்லை.

03 இத்தகைய சூழ்நிலையில் சுயேற்சைக்குழு ஆகிய நாங்கள் எங்களது தனியான நகர சபை இலக்கை நோக்கியபயணத்தில் எத்தகைய விட்டுக் கொடுப்புக்களையும் தனியான நகரசபைக்காக செய்யத் தயாரான நிலையில்,பள்ளிவாசல் நிருவாக சபை,உலமா சபை,வர்த்தகசங்கம்,மீனவர் சங்கங்கள்;, இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களும் உள்ளிட்ட சாய்ந்தமருதுமாளிகைக்காடு மக்களும் அத்துடன் கொழும்பு வாழ் சாய்ந்தமருது நகரசபைக்கான இலக்கை நோக்கிய தோழர்கள் மற்றும் கடல் கடந்துவாழும் எமது உடன் பிறப்புக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பான சாய்ந்தமருதுதனியான நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தல் மிகவிரைவில் வெளியிடப்படவேண்டும் என்பதைஎதிர்பார்க்கின்றோம்.

மேலும் கடந்தகாலங்களில் அதிகாரங்களை வைத்துக் கொண்டு எமது இலக்கான தனியான நகரசபையை இழுத்தடிப்புச் செய்தது மட்டுமல்லாது பலகழுத்தறுப்புக்களையும் மேற்கொண்டது போன்ற செயற்பாடுகளோடு அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள நினைக்கும் பட்சத்தில் அதுபகற் கனவாகவும் எதிர்காலங்களில் அத்தகையவர்களுக்கு பாரிய அரசியல் பின்னடவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மேலும் எமது ஜனநாயக ரீதியான சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை போராட்டம் இறுதி இலக்கைஅடையும் வரை வலுவடைந்து செல்வதுமட்டுமல்லாது ,எங்களது ஜனநாயகரீதியான போராட்ட முன்னெடுப்புக்களும்,வியூகங்களும் எதிர்பார்க்கப்படாத வடிவங்களில் முன்னெடுக்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஓற்றுமையேஎமதுபலம்! ஜனநாயகமேஎமதுபோராட்ட வழி!!தனியான நகரசபையே எமது இலக்கு!!!


இவ்வண்ணம்
சாய்ந்தமருது–மாளிகைக்காடு
சுயேற்சைக்குழுஉறுப்பினர்கள்,
கல்முனைமாநகர சபை மற்றும்
காரைதீவு பிரதேச சபை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -