பிரதமர் ரணிலின் அரசில் நான்கு முஸ்லிம் கெபினட் அமைச்சர்களும் ஒரு தமிழ் அமைச்சரும் உள்ளனர். முஸ்லிம்களில் இருவர் ஒரே மாவட்டமான கண்டியை சேர்ந்த ஹக்கீம் மற்றும் ஹலீம் ஆகியோர்.
கண்டிக்கு அடுத்த மாவட்டமான கேகாலையை சேர்ந்தவர் கபீர் ஹாஷிம்.
இதனை இருந்தும் கிழக்கு மாகாணத்துக்கோ கொழும்பு மாவட்டத்துக்கோ ஒரு கெபினட் முஸ்லிம் அமைச்சரும் இல்லை என்பதை எண்ணி முஸ்லிம் சமூகம் சந்தோசப்படுகிறதா அல்லது கவலைப்படுகிறதா என்பது புரியவில்லை. மஹிந்த ஆட்சியில் இப்படியொரு அநியாயம் ஏற்பட்டால் இந்நேரம் மூலை முடுக்கெல்லாம் கூட்டம் கூடி ஏசியிருப்பார்கள். ஆனால் ஐ தே க இப்படி செய்தால் அதனை நேரடியாக விமர்சிக்கும் எவரையும் சமூக வலையத்தளங்களில் காணவில்லை.
அண்மைய மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த ஆட்சியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கெபினட் அமைச்சராக ஹிஸ்புல்லா இருந்தார். கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக தமிழர் ஒருவர் இருந்தார்.
ஆனால் இப்போது ரணிலின் ஆட்சியில் முஸ்லிம்கள் மிக அதிகம் வாழும் கிழக்கும் கொழும்பும் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முஸ்லிம்கள் இதற்காக ஆத்திரப்படாமல் விவஸ்த்தை கெட்டவர்களாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஐக்கிய தேசிய கட்சியின் மிகப்பெரிய பலமாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி