கஹட்டோவிட்டவில் அமைந்திருக்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிறுவனத்தில் இயங்கும் முஸ்அப் பின் உமைர் மற்றும் ஹப்ஸா பின் உமர் ஆகிய ஹிப்ழ் பிரிவு வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் அண்மையில் (12 - 14) நடைபெற்றது. அதில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (16) இமாம் ஷாபிஈ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட - ஓகொடபொல - உடுகொட கிளையின் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மௌலவி அப்துஸ்ஸலாம் பலாஹி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், இமாம் ஷாபிஈ நிறுவனத்தின் தலைவர் ஆசிரியர் பூஸரி, பணிப்பாளர் மௌலவி முஜீப் கபூரி, மீள்பார்வைப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பியாஸ் மொஹமட், மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.