மக்கள் அபிவிருத்தியடையும் வகையில் நாம் செயற்படவேண்டும் - அமைச்சர் அர்ஜுன ரணதுங்க


ஐ. ஏ. காதிர் கான்-
க்கள் அபிவிருத்தியடையும் வகையில் நாம் எப்பொழுதும் கண்ணுங்கருத்துமாக இருந்து செயற்படவேண்டும். இதுவே எமக்கு சிறந்தது. இத்திட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் விமான சேவைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என, போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தனது கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ”நீண்ட கால அரசியல் நெருக்கடி இந்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், கடந்த 51 நாட்களாக இந்நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் முடங்கிக் கிடந்தன. விசேடமாக, இந்நாட்டு பொருளாதாரத்தில் சிக்கல் நிலை தோன்றியது.
இக்கால கட்டத்தின் பின்னர், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதன் பின்னர், அமைச்சரவை நியமிக்கப்பட்டது. அமைச்சரவையின் பின்னர் அமைச்சர்களை சந்தித்த பிரதமர், விரைவில் அமைச்சுக்களின் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் நான் இன்று இவ்வமைச்சில் என்னுடைய கடமைகளை ஆரம்பித்தேன்.
இது நாட்டிற்கு மிகவும் முக்கியமான அமைச்சாகும். போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் என்பன, இன்று பெருமளவில் அபிவிருத்தியடைந்துள்ளது. நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, இலங்கை போக்குவரத்துச் சபை தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும், இலங்கை போக்குவரத்துச் சபையில் காணப்படுகின்ற பல்வேறு விடயதானங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. அத்துடன், போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து செயற்படவேண்டியுள்ளது. மக்கள் அபிவிருத்தியடையும் வகையில் நாம் செயற்பட வேண்டும் “ என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன உட்பட இலங்கை போக்குவரத்துச் சபையின் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -