உள்ளத் தூய்மைக்கே வெற்றி கிடைக்கும்! கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை!!


உள்ளத் தூய்மையுடன் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கு இறைவனின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

எம்.ஜே.எம்.சஜீத்-
மது மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் உள்ளத்தூய்மையுடன் முன்னெடுக்கப்படும் போது இச்செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கு இறைவனின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும் என பாலமுனை பிறைன்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அல் ஹிக்மா கல்லூரியில் பாலமுனை பிறைன்ஸ் கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.ரீ.தஸ்தகீர் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்...
உலகத்தில் இறைவனால் மனிதர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அருள்களில் பெறுமதி காண முடியாத பொக்கிசமாக நேரமும், அவனது வாழ்க்கையும் அமைந்துள்ளது. எனவே, எமக்கு இறைவனால் வழங்கப்பட்ட நேரத்தினையும், வாழ்க்கையையும் உலக வாழ்க்கைக்கும் , மறுமை வாழ்க்கைக்கும் பயன் உள்ள விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.
நமது ஆசிரியர் சமூகம் தனி மனிதனையும், சமூகத்தையும் உருவாக்கி வருகின்றனர். இதற்காக அவர்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு பெற்றோர்களால் ஒப்படைக்கப்படும் எமது சின்னஞ் சிறு பிள்ளைகளை பாரம் எடுத்து அவர்களிடம் மறைந்து கிடக்கும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்காலம் சிறப்புர பாரிய பங்கினை வழங்கி வருகின்றனர். பெற்றோர்கள் எப்போதும் நமது பிள்ளைகளுடன் சிநேகபூர்வமாகப் பழகி அவர்களின் உள்ளக்கிடக்கில் மறைந்திருக்கும் எண்ணங்கள் தொடர்பாக மனம் திறந்து உரையாட வேண்டும். இதனால் பிள்ளைகள் தங்களின் மனதில் உள்ள எண்ணங்களையும், செயற்பாடுகளையும் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி பாலமுனை பிறைன்ஸ் கல்லூரி நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வறுமை கல்வி வளர்ச்சிக்கு தடையான ஒரு காரணியாக அமைந்துவிடக் கூடாது.தங்களின் பிரதேசத்தில் இருந்தவாரே நமது மாணவர்கள் கல்வியினைப் பெற்று அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற உள்ளத் தூய்மையுடன் கடந்த இரண்டு வருட காலமாக அர்ப்பணிப்போடு செயற்பட்டு நமது மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளில் உயர் மட்டத்தினை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் பிறைன்ஸ் கல்லூரியின் பணிப்பாளரையும், ஆசிரியர்கள், நிருவாக சபையினையும் மக்கள் சார்பில் மனதார வாழ்த்துகின்றேன். உங்களின் செயற்பாடுகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க இறைவன் நமக்கு சந்தர்ப்பம் தருவான் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது.
கடந்த இரண்டு வருட காலமாக பாலமுனை அல் - ஹிக்மா கல்லூரியில்; மூன்று மாடிக் கட்டிடம் வருகிறது. வந்து விட்டது என சிலர் பெருமையாகப் பேசிக் கொண்டனர். நானும் இக்கட்டட பணிகள் நடைபெற்று வருவதாக எண்ணியிருந்தேன். இந்நிகழ்வில் அதிபரின் உரையின் போதுதான் இன்னும் அந்த 03 மாடிக் கட்டடம் அமைக்கப்படவில்லை என்பதனை அறிந்து கொண்டேன்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படாமல் வேறு பிரதேசங்களுக்கு இந்நிதிகளைக் கொண்டு சென்ற பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பான ஆதாரங்களை கிழக்கு மாகாண ஆளுனரிடம் ஒப்படைத்துள்ளோம். கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களுடன் தொடர்பு கொண்டு பாலமுனை அல் - ஹிக்மா கல்லூரியில் 03மாடிக் கட்டடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விடயங்களை முன்வைத்து இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க இறைவன் எங்களுக்கு சந்தர்ப்பம் தருவான் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்சில் , பிரதேச சபைய உறுப்பினர்கள் எஸ்.எம்.ஹனிபா, ஏ.பி.பதுர்டீன், எச்.எம்.சிறாஜ், ஆர்.நிஸ்பா நௌசாத், பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் அதிபர் ஏ.ஆர்.றமீன் ஹஸ்வி(மதனி) உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -