நிந்தவூர் அல்-அகீலா பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
அல்-அகீலா பாலர் பாடசாலையின் தலைவர் ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதில் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றஸீன், முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.அமீன், எஸ்.எல்.எம்.சலீம், அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை ஒய்வு பெற்ற அதிபர் திருமதி மைமூனா செயினுலாப்தீன், அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர் ஏ.எல்.நிசாமுதீன், உயர் அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பிரதேச முக்கியஸ்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அல்-அகீலா பாலர் பாடசாலை நிர்வாகத்தினால் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பைசால் காசீம் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.