வவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினரின் காத்தான்குடி விஜயம்...

பஹ்த் ஜுனைட்-
ல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையிலான வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார்,பிரதம கணக்காளர் திரு.பாலகுமார் உள்ளிட்ட குழுவினரின் நல்லிணக்க சுற்றுலாவின் ஒரு அங்கமாக ஞாயிற்றுக்கிழமை (16) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினுடனான சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் ஏ.அஹமதுலெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் காத்தான்குடி சம்மேளனத்தின் நிர்வாக கட்டமைப்பு, சேவைகள், முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பேசப்பட்டதுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இவ் சிநேகபூர்வ சந்திப்பில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் மற்றும் சம்மேள நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்த குழுவினரோடு சிநேகபூர்வமாக கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -