ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும்.நமதுநாட்டிலுள்ள ஏனைய இனங்கள் தங்களது உரிமைகளை உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்ள தமக்கென பல்வேறு அரசியல் கட்சிகளை வைத்திருந்தவேளையில் நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மற்றும் ஏனைய விவகாரங்களில் முஸ்லிம் சமூகம் முற்றாக புறக்கணிக்கப்பட்டபுறச்சூழலில் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அச்சமூகத்தின் தனித்துவத்தை பேணும் அடிப்படை நோக்கில் முஸ்லிம்காங்கிரஸ் தோற்றம் பெற்றது.
முஸ்லிம்களின் அடிப்படை மூலாதாரங்களான அல் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் தனது அரசியல் கொள்கையை முஸ்லிம் காங்கிரஸ்வடிவமைத்துக்கொண்ட போதிலும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான சக்திகளால் ஓர் இனவாத கட்சியாக அது விமர்சிக்கப்பட்டது.ஆனால் தோற்றம்பெற்ற காலம் முதல் முஸ்லிம் சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு அப்பால் நாட்டின் தேச நலன் சார்ந்தும் ஜனநாயக விழுமியங்களைஉறுதிப்படுத்தும் வகையிலும் அது செயற்பட்டு வந்துள்ளதை நடுநிலை நோக்காளர்களால் புரிந்துகொள்ள முடியும்.
1988,1989ம் ஆண்டுகளில் முஸ்லிம் சமூகம் சார்ந்து தேர்தல்களில் அச்சமூகத்திற்கான அரசியல் பிரதிநிதிதத்துவத்தை பெற்றுக்கொள்ள தனிவழிநின்று முயற்சித்து வெற்றி பெற்ற போதும் அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தேச முக்கியத்துவம் வாய்ந்த முக்கியகோரிக்கையொன்றை முன்வைத்து தனது பேரம் பேசும் ஆற்றலால் வெற்றியும் பெற்றது.
அப்போது காணப்பட்ட தேர்தல் கணிப்பீட்டு முறையில்கட்சிகள் பெறவேண்டிய அடிப்படை தகைமையான 12.5% என்ற வெட்டுப்புள்ளியை தனது பேரம் பேசும் ஆற்றலால் 5% ஆக குறைத்துக்கொள்ளமுடிந்தது சிறுபான்மை கட்சிகளுக்கும் பெரும்பான்மை சார்பாக செயற்படுகின்ற சிறிய கட்சிகளுக்கும் மிகப்பெரும் வரப்பிரசாதமாகஅமைந்தது.இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயற்பட்ட திரு.ஆர்.பிரேமதாஸாவே அப்போதையஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக களமிறங்கியிருந்தார்.இவர் மேல் தட்டு வர்க்கம் சாராதவராக இருந்தமையால் இவருடையதேர்தல் வெற்றி மிகச்சவாலானதாக காணப்பட்ட சூழ்நிலையில் தனக்கு ஆதரவு வழங்குமாறு நமது கட்சியின் ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்அவர்களிடம் ஆதரவைக்கோரியிருந்தார்.
அப்போதைய தேர்தல் கணிப்பீட்டு முறையில் காணப்பட்ட அடிப்படை தேர்தல் கணிப்பீடு தகைமைவெட்டுப்புள்ளியாக 12.5%மே இருந்தது.இதனால் சிறுபான்மை கட்சிகள்,மற்றும் பெரும்பான்மை சமூகத்தில் செயற்படும் சிறிய கட்சிகளின் அரசியல்பிரதிநிதித்துவமும் மிகவும் கேள்விக்குறியாக மாறியது.எனவே தலைவர் அஷ்ரப் அவர்கள் ஜனாதிபதி பிரேமதாஸாவுக்கு ஆதரவு வழங்குவதாகஇருந்தால் இவ்வெட்டுப்புள்ளியை 12.5% இலிருந்து 5% ஆக குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையை தனது பிரதான கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.அப்போது பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கென பாராளுமன்றத்தை விஷேடமாக கூட்டிஇக்கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுத்தார்.இது சிறுபான்மை கட்சிகளினதும் மற்றும் ஏனைய சிறிய கட்சிகளினதும் அரசியல்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது.
அத்துடன் தலைவர் அஷ்ரப் அவர்கள் மேற்படி கோரிக்கையைவென்றெடுத்ததன் மூலம் தமிழ்,முஸ்லிம்,மலையக மக்களின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பெரும்பான்மைசிங்கள சமூகத்தில் சிறிய கட்சிகளாக செயற்படும் ஜே.வீ.பி போன்ற கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தினார். ஜனநாயகத்தின் பண்புகளில் பெரும்பான்மை மக்களினது உரிமை உறுதிப்படுத்தப்படுகின்ற அதே வேளையில் சிறுபான்மை மக்களின்உரிமைகளும் பாதுகாக்கக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படை பண்பை தனது சாணக்கியத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ்பாதுகாத்தது.
தொடர்ந்து நாட்டில் புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் சமாதானத்தின் தேவதையாக தன்னை உருவகப்படுத்திநான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சிம்மாசனம் ஏறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாருக்கு சிறுபான்மைமக்கள் தமது உச்சபட்ச ஆதரவை வழங்கியிருந்தனர்.முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு சந்திரிக்காவின்

வெற்றியில் அபரிதமாகஇருந்தது.சந்திரிக்காவின் அமைச்சரவையில் பலதரப்பட்டவர்கள் இருந்த சூழலில் சந்திரிக்கா அம்மையாரின் தலைமைத்துவத்தின் கீழ்வடிவமைக்கப்பட்ட இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டத்தை பாராளுமன்றத்தில் தலைவர் அஷ்ரப் அவர்களே சமர்ப்பித்தார்.பிராந்தியங்களின்ஒன்றியம் என்ற பிரதான கருத்திட்டத்தை கொண்டதாகவும் தமிழ் மக்களுக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கும் தீர்வுத்திட்டமாக இதுகாணப்பட்டது.இப்பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தலைவர் அஷ்ரப் அவர்கள் உரையாற்றும்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாரியஎதிர்ப்பை எதிர்கொண்டார்.தீர்வுத்திட்டத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்றத்த்திலேயே கொளுத்தினர்.
இத்தீர்வுத்திட்டம்நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நாடு பாரிய வளர்ச்சியை கண்டிருக்கும்.ஆக நாட்டின் சிறுபான்மை,பெரும்பான்மை மக்களின் உரிமைகளைஉறுதிப்படுத்தி ஜனநாயகப்பண்புகளை பேணும் வகையில் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸைபிரதிநிதித்துவப்படுத்தி பாரிய பங்காற்றினார்.
தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற தற்போதைய தலைவர் றவூப்ஹக்கீம் தான் தலைவராக தெரிவுசெய்யப்பட்டது முதல் இன்று வரை நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாத்து உறுதிப்படுத்த பல்வேறுபணிகளை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார்.
சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் சமாதான முன்னெடுப்புகள் சீர்குலைந்த நிலையில் புலிகளும் இலங்கை இராணுவத்துக்கு நிகரான சமபலம்கொண்டவர்களாகவும் தமது ஆயுத வல்லமையின் ஊடாகவும் தாக்குதல் திறனிலும் மிகப்பலம் பொருந்திய நிலையில் காணப்பட்டனர்.அத்துடன்இலங்கை இராணுவம் புலிகளின் பல்வேறு மூர்க்கமான தாக்குதல்களை எதிர்கொண்டதுடன் இலங்கையின் பொருளாதாரமும் மிகப்பலவீனமானநிலையை அடைந்தது.2002ம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றது.இவ் அரசாங்கத்தில் 12 பாராளுமன்றஉறுப்பினர்களோடு மிகப்பெரும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளியாக மாறியது.இவ்வேளையில் புலிகளின்வல்லமையும்,புலம்பெயர் தமிழ் சமூகத்தின் காத்திரமான செயற்பாடும் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இலங்கை அரசுக்குஏற்படுத்தியது.சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன்மிக நீண்டகாலத்தின் பின் யுத்த நிறுத்தமும் அமுல்படுத்தப்பட்டது.இவ்வேளையில் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் பல்வேறுஅச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தனர்.முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருந்தது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரணில்விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வுக்கு வந்திருந்தது.புலிகளுக்கும்அரசாங்கத்துக்குமிடையிலான சமாதான ஒப்பந்தம் தொடர்பிலான முன்னாயத்த பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்களும் ஒரு தரப்பாகஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வைத்த கோரிக்கையை புலிகள் முற்றாக மறுத்திருந்தனர்.நீண்டஇழுபறியின் பின்னர் பிரதம மந்திரியினால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையில் அரச தரப்பில் ஒருபிரதிநிதியாக முஸ்லிம்கள் சார்பாக றவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் என்ற நிபந்தனையின் பின்னர் புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான ஒப்பந்தம்கைச்சாத்திடப்பட்டது.வட கிழக்கில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு கேள்விக்குள்ளான நிலையில் இது முஸ்லிம் சமூகத்துக்குள் பாரியஅதிர்வலைகளை ஏற்படுத்தியது.அப்போது 12 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்திலிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தின்அரசாங்கமாகவே காணப்பட்டது.சமாதான ஒப்பந்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்ட போது அது அரசிலிருந்து வெளியேறவேண்டுமென்ற கோரிக்கை சமூகத்தில் எழுந்தது.இவ்வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகப்பொறுப்புடனும்,பக்குவத்துடனும்நடந்துகொண்டது.நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றிருந்த நிலையில் புரையோடிப்போயிருந்த உள்நாட்டு யுத்தத்தின்காரணமாக சிங்கள,தமிழ்,முஸ்லிம் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தனர்.நாட்டின் சொத்துக்களுக்கு பாரிய சேதம்ஏற்பட்டிருந்தது.மக்கள் நிம்மதியிழந்த சூழ்நிலையில் சமாதானமே முக்கிய தேவையாக இருந்தது.முஸ்லிம் காங்கிரஸ் அரசங்கத்திலிருந்து வெளியேறியிருந்தால் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்காது,எனவே நாட்டு மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திஅரசியல் யாப்பு மாற்றத்தின் ஊடாக சகல மக்களின் அடிப்படை உரிமைகளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தும் ஜனநாயக வெற்றிக்காக முஸ்லிம்காங்கிரஸ் தியாகம் செய்தது.
நீண்டகாலமாக நாட்டின் ஜனநாயக பாரம்பரியங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் சுயாதீன நீதித்துறை, சுயாதீனபொதுச்சேவை,சுயாதீன பொலிஸ்,சுயாதீன பத்திரிகைச்சுதந்திரம் ,சுயாதீன தேர்தல் ஆணையகம் உள்ளிட்ட பல்வேறு அரச துறைகள் தலையீடின்றிசுயாதீனமாக செயற்படும் ஆணைக்குழுக்களாக ஸ்தாபிக்கப்பட்ட வேண்டுமென்ற கோரிக்கை ஜனநாயகத்தையும்,மனித உரிமைகளையும்நேசிக்கும் சக்திகளால் முன்வைக்கப்பட்டு வந்தது.இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் பாராளுமன்றத்திலும்வெளியிலும் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியிருந்ததுடன் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவிடமும் இவ்விடயம் சட்ட ரீதியாக அரசியல் யாப்பின்விஷேட ஏற்பாடாக 17வது திருத்தமாக நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார்.இவ்விடயம் இழுத்தடிக்கப்பட்டசூழ்நிலையில் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்ட றவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்துக்கு சென்று அங்கேயேதங்கி கொழும்பின் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்ததுடன் பிரதம மந்திரி மூதூருக்கு வந்து 100 நாட்களுக்குள் இவ்ஆணைக்குழுக்களை நியமிப்பேன் என்று உத்தரவாதம் தரும் வரையில் திருகோணமலை மாவட்டத்தை விட்டு வெளியே வரமாட்டேன் என்று கூறிமூதூரில் அஞ்சாவாசமிருந்தார்.பின்னர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு வந்து உத்தரவாதம் வழங்கியதன் பேரிலேயே றவூப் ஹக்கீம்கொழும்புக்கு திரும்பினார்.முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இந்த கோரிக்கையே நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்களை பலப்படுத்தும் சுதந்திரஆணைக்குழுக்களை உள்ளடக்கிய அரசியல் யாப்பின் 17வது திருத்தமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பின்னர் ஜனாதிபதியாகமுடிசூடிக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில்பெற்றுக்கொண்டு ஜனநாயக கட்டமைப்பை முற்றாக சிதைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் ஆணைக்குழுக்களை கொண்டுவரும் வகையிலும் தனதுஏதோர்ச்சாதிகாரத்தை நிலைப்படுத்தும் வகையிலான 18வது திருத்தத்தை அரசியல் யாப்பில் கொண்டுவந்து ஜனநாயகத்தை படுகுழியில்தள்ளினார்.துரதிஷ்ட வசமாக முஸ்லிம் காங்கிரஸும் இச்சட்டமூலத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானது.இதற்குகட்சிக்குள்ளிருந்த சதிகாரர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்சியை காட்டிக்கொடுத்ததால் வேறு வழியின்றி முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசுடன்இணைய வேண்டியேற்பட்டது.இதனையே றவூப் ஹக்கீம் கண்ணைத்திறந்து கொண்டே படுகுழியில் வீழ்ந்ததாக கூறியிருந்தார்.பின்னர் 2015ம்ஆண்டில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரராகிய முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய பங்காளிகளோடு இணைந்த வகையில்நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் அரசியல் யாப்பில் 19வது திருத்தத்தை நிறைவேற்றியதன் ஊடாக 18வது திருத்தத்தை வலுவிழக்கச்செய்து மீண்டும்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் முக்கிய பணியை ஏனைய முற்போக்கு சக்திகளோடு இணைந்து செய்து முடித்தது.அதனூடாகவேஇன்று நாட்டின் அரசியல் யாப்பு பாதுகாக்கப்பட்டிருப்பதோடு நீதித்துறையின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் புலிகளுக்கு எதிரான தீவிரமான யுத்தம் முன்னெடுக்கப்பட்டபோது நவம்பர் 2,2007இல் புலிகளின் அரசியல்துறை பணிமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்கொல்லப்பட்டார்.அப்போதைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தோடும் சர்வதேச சமூகத்தோடும் சமாதான பேச்சுவார்த்தையின் புலிகள் சார்பாகசெயற்படும் பிரதானவராக காணப்பட்ட தமிழ்ச்செல்வனின் கொலை சமாதானத்தை நேசிக்கும் சக்திகளுக்கு அதிர்ச்சியைகொடுத்தது.இக்கொலையினை கண்டித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம்,சமாதானவாசற்கதவுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று கூறியதுடன் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக செய்துமுடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாமன்னராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுடன்சிங்கள மக்கள்மத்தியில் செல்வாக்கு மிக்கவராகவும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் சர்வாதிகாரியாகவும் மாற்றம் பெற்றார்.தொடர்ந்து2010ம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் அவரை எதிர்த்து நிற்பதற்கு பலமான வேட்பாளரின் அவசியம் தேவைப்பட்டபோது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எடுத்துக்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக இலங்கையின் யுத்த வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.இப்பொது வேட்பாளருக்கான தேர்தல்பிரச்சாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்காற்றியது.நாட்டில் மஹிந்த ராஜபக்ஷவினால் தோற்றுவிக்கப்பட்ட அராஜக செயற்பாடுகளைவன்மையாக கண்டித்தது.பொன்சேக்கா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் மஹிந்தவே வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டார். தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவினால் பல்வேறு கெடுபிடிகளுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா உள்ளான போது அதனைதீவிரமாக றவூப் ஹக்கீம் எதிர்த்தார்.மஹிந்தவின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்தார்.மேலும் 2005,2010 ஆகியஜனாதிபதித்தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷ றவூப் ஹக்கீமின் இல்லத்துக்கு நேராகச்சென்று தனக்கு ஆதரவு வழங்குமாறு கோரிய போதிலும்மஹிந்தவின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக தன்னால் அவரை ஆதரிக்க முடியாதென்று தெரிவித்திருந்தமையும் இங்குகவனிக்கத்தக்கது.
தொடர்ந்து மஹிந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்தபோது அரசாங்கத்தின் அமைச்சராக இருந்துகொண்டேமஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் கண்டனங்களை தெரிவித்து வந்ததுடன் ஆளுங்கட்சிக்குள்ளிருந்துகொண்டே எதிர்க்கட்சி அரசியல் செய்யும் ஒரு பணியை றவூப் ஹக்கீம் மேற்கொண்டார்.இவ்வேளையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை முற்றாகபுறந்தள்ளி மத்திய அரசின் மேலாதிக்கத்தை நிறுவும் மத்திய அதிகார குவிவு மையத்தையே மஹிந்த முன்னெடுத்தார்.புரையோடிப்போயிருந்தஇனப்பிரச்சினையின் தீர்வாக மிகப்பிரயத்தனத்துக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டின்முதல்கட்டமாக அமைச்சரவையில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்ற மஹிந்த நடவடிக்கை எடுத்தபோது றவூப் ஹக்கீம்வெளிநாட்டிலிருந்தார்.இதனை கேள்வியுற்ற அவர் உடனடியாக நாடு திரும்பி ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று அமைச்சரவைக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியதனால் இந்த நடவடிக்கையை மஹிந்த கைவிடவேண்டியேற்பட்டது .இவ்வேளையில்றவூப் ஹக்கீம் சுகவீனமுற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தேர்தல் முறை மாற்றம் உள்ளூராட்சி மன்ற சட்டத்திருத்தம் என்று சிறுபான்மைக்கெதிரான நடவடிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷமுன்னெடுத்தபோது சிறுபான்மைக்கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் தனித்து இயங்குவதனூடாக இச்சவாலை எதிர்கொள்ள முடியாது என்றுவலியுறுத்திய றவூப் ஹக்கீம் சிறுபான்மை,சிறிய கட்சிகள் இப்பிரச்சினைகளுக்கெதிராக ஒன்றிணைந்து செயல்படும் களச்சூழலைஉருவாக்கினார்.இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு,ஜே,வீ.பீ,ஈ.பி.டீ.பி,தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்ச்சிகளோடு பேசியதோடுஇது தொடர்பிலான அதிக சந்திப்புகள் அமைச்சர் றவூப் ஹக்கீம் இல்லத்திலேயே நடைபெற்றதோடு இச்சவாலை சிறுபான்மை கட்சிகள் மற்றும்சிறிய கட்சிகள் இணைந்தே எதிர்நோக்குவது என்ற முடிவுக்கு வந்ததுடன் உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டத்திலும் மாகாண சபை தேர்தல்முறைமையிலும் கூடிய தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் இச்செயற்பாடுகள் அமைந்தன.பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபைதேர்தல் முறைமை தொடர்பிலான விடயம் பாராளுமன்றத்துக்கு வந்தபோது அதன் இறுதிவடிவம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயேநிறைவேற்றப்படவேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் ரணிலிடம் அதனை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே தமது கட்சி ஆதரவு வழங்கும் என்றநிபந்தனையை முன்வைத்த றவூப் ஹக்கீம் அதனை சட்ட ரீதியாகவும் நிறைவேறிக்கொண்டார்.
தற்போது நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை கையாண்ட விதத்தில் சிறுபான்மை கட்சிகளின் பங்கு அளப்பரியது.அத்துடன் இவ்விடயத்தில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் செயற்பட்டவிதம் முஸ்லிம் மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதுடன்ஏனைய சமூகங்கள் மத்தியிலும் முஸ்லிம்களை பற்றிய நல் அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தலைவர் றவூப் ஹக்கீமின் நிதானமானசெயற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழிகாட்டியாக அமைந்ததுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் மேல் மீண்டும் நம்பிக்கைதுளிர்விடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களுக்கு இணையாக முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசும் ஆற்றல்நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் சிறுபான்மை கட்சிகளுக்கிடையே ஓர் ஒருமித்த செயற்பாட்டை தோற்றுவித்திருப்பதுடன் இதற்கான அறைகூவலைஅண்மையில் றவூப் ஹக்கீம் வெளியிட்ட போது அதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பும்,தமிழ் முற்போக்கு கூட்டணியும் வரவேற்றுள்ளன.ஆகமொத்தத்தில் சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடு நாட்டின் அரசியல் யாப்பை பாதுகாத்துள்ளதுடன் நீத்தித்துறையின்சுயாதீனத்தையும் சட்டத்துறையில் மக்கள் இறைமையையும் உறுதிப்படுத்தியுள்ளது.