மட்/காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் தரம் எட்டு கல்வி பயின்ற மாணவிகள் இருவர் கடந்த வருடம் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டிகளில் பங்கேற்று Gold மற்றும் Silver பதக்கங்கள் பெற்று சாதனை படைத்திருந்தனர். சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த மேற்படி மாணவர்களை பாராட்டி கௌரவித்த நிகழ்வு பாடசாலையில் கடந்தாண்டு நடை பெற்ற போது அந்நிகழ்வில் பொறியியலாளர் சிப்லி பாறுக் கலந்து கொண்டிருந்தார்.
மேற்படி பாடசாலை மாணவிகள் இருவரும் மிகவும் திறமைசாலிகள் என்பது மாத்திரமின்றி மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் கல்வி பயின்று வருகின்றார்கள் அதிலொரு மாணவி தந்தை இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற தகவலை அறிந்த பொறியியலாளர் சிப்லி பாறுக் மேற்படி மாணவர்கள் க.பொ.த.சா.தரம் கல்வி பயிலும் வரையான காலப்பகுதிகளில் மேற்படி இரு மாணவிகளின் கல்வி செலவீனங்களை தான் பொறுப்போற்பதாக அன்று கொடுத்த வாக்குறுதிக்கமைய உதவுத் தொகையினை நேரினில் சென்று கடந்த வாரம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொறியியலாளர் சிப்லி பாறுக்
எங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பணிகளை இறைவனுக்கு அஞ்சியவர்களாக எம்மால் செய்ய முடிந்ததையிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னால் காத்தான்குடி நகர உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.