காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம். ஜாஹிரின் முயற்சியின் பயனால் மாளிகைக்காடு பிரதேச தெருமின் விளக்குகள் பழுது பார்க்கும் வேலைத்திட்டம் இடம்பெற்றது.
நீண்ட நாட்களாக பழுது பார்க்காமல் காணப்பட்டதனால் இருள் சூழ்ந்து காணப்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தின் சில வீதிகளில் போக்குவரத்து மற்றும் பிரதேச மக்களின் அன்றாட தேவைகளை இரவு வேளைகளில் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிரமங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளமையால் மாளிகைக்காடு பிரதேச மக்கள் காரைதீவு பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம். ஜாஹிருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.