இந்தியாவின் இ.ஜீ.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியின் பிரதிநிதிகளுக்கும் நுஜா ஊடக அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

எஸ். அஷ்ரப்கான்-
ந்தியாவின் தமிழ்நாடு நாகப்பட்டினம் இ.ஜீ.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும், நுஜா ஊடக அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) காலை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

நுஜா ஊடக அமைப்பின் சார்பில் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் றியாத் ஏ மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் இ.ஜீ.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியின் சார்பில் பேராசிரியர் வீ.சிவராமன், மணிகண்டன், இராதாகிருஸ்ணன்,முரளி உட்பட விரிவுரையார்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்குமிடையில் ஊடகத்துறையின் மூலம் நல்லுறவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன் இந்தியாவில் ஊடக மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை செய்து தருவதாகவும் பேராசிரியர் வீ.சிவராமன் குறிப்பிட்டார்.
அத்தோடு எதிர்வரும் 2019 மார்ச் மாதம் இந்தியாவின் தமிழ்நாடு நாகப்பட்டினம் இ.ஜீ.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் இடம்பெறவுள்ள சர்வதேச ஆய்வு மகாநாட்டில் நுஜா ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 ஊடகவியலாளர்களை கலந்து கொள்ளுமாறும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -