சரத்பொன்சேக்காவுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி


- எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவி வழங்கப்போவதில்லை-
க்கிய தேசியக்கட்சியின் எம்.பியான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்காவுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவி வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
இதன்போது சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கட்சி தலைமையின் உத்தரவைமீறி ‘பல்டி’யடித்த இவர்களுக்கு பதவி வழங்கப்படக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொன்சேக்கா உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தான் அமைச்சப் பதவி வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சரத்பொன்சேகா மனநோயாளி என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்ல, மைத்திரியின் கைகளில் பதவியைப் பெறுவது கவலைக்குரிய விடயம் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -