கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் ரேற்று (21) வெள்ளிக் கிழமை நகர சபையின் விசேட சபை மண்டபத்தில் ஆரம்பமானது.
2019 ம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்ட அறிக்கைகளை நகர சபையின் தவிசாளரினால் வாசிக்கப்பட்டது. சக உறுப்பினர்களின் ஆதரவுடன் 2019 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
தவிசாளர் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட நகர சபையில் எவ்வித வாக்கெடுப்பும் இன்றி ஏகமானதாக வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளராக இருந்து வருகின்றார். இதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கடசிகள் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தனர். குறித்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக 2019 ம் ஆண்டில் புதிய பல அபிவிருத்திகளை கிண்ணியாவுக்கு மேற்கொணாடு நகரை அபிவிருத்தி மயமாக்கப்பட்ட நகராக மாற்றியமைக்கவுள்ளதாகவும் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் வரவு செலவு திட்ட உரையின் போது தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாகவும் ஏகமானதாகவும் நிறைவேற்றிய பிரதி தவிசாளர், சக உறுப்பினர்களுக்கும் நன்றிகளையும் தெரிவிப்பதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.