அரச பாடசாலைகளில் 2019இல் தரம் ஒன்று மாணவர்களுக்காக முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 17ஆம் திகதி நடாத்த கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான சுற்றுநிருபத்தை கல்வியமைச்சு சகல மாகாண கல்விச்செயலாளர்கள் பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளது.
முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும்போது இருவேறு நிகழ்ச்சிகளை கட்டாயம் நடாத்தவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய சிறார்கள் பெற்றோர்கள் மற்றும் அதிதிகளை வரவேற்கும் நிகழ்வை நடாத்துதல். அதன்போது தேசிய மற்றும் பாடசாலைக்கொடிகளை ஏற்றல் தேசியகீதம் மற்றும் பாடசாலைக்கீதம் என்பனவற்றை இசைத்தல்.
இரண்டாவது புதிய மாணவர்களை வரவேற்பதற்காக ஆரம்பக்கல்விப்பிரிவு மாணவர்களின் பொருத்தமான கலைநிகழ்சியொன்றையும் நடாத்துதல்.
புதிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய இந்நிகழ்வில் பெற்றோருக்கு முதலாந்தரகலைத்திட்டம் தொடர்பில் அறிவூட்டம் செய்யப்படவேண்டும். எனவேஇன்று 17ஆம் திகதிக்கு முன்பதாக புதிய பிள்ளைகளை இனங்காணும் வேலைத்திட்டம் நிறைவுசெய்யப்படவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.