கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்புலன்ஸ் வாகனங்கள் பைசல் காசிமினால் சனிக் கிழமை வழங்கப்படும்


சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.இந்நிகழ்வு பைசல் காசிமின் தலைமையில் சனிக்கிழமை [19.01.2019] மாலை நான்கு மணிக்கு நிந்தவூரில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை,மீறாவோடை,நிந்தவூர்,இறக்காமம்,அம்பாறை,மட்டக்களப்பு,பாணம,ஏறாவூர்,அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கே இவை வழங்கப்படவுள்ளன.

இதேவேளை,ஏனைய மாகாணங்களுக்கான அம்புலன்ஸ் வாகனங்களை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சில் வைத்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த வருடத்துக்குள் மேலும் பல வைத்தியசாலைகளில் காணப்படும் அம்புலன்ஸ் வாகனங்களுக்கான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -