மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இராணுவ வீரர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப் பட்டுள்ளது.
மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனத்தொடர் மீதே ரிமோட் கண்ரோல் மூலம் இயங்கும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று காலை 06.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
தாக்குதலில் இராணுவக் கப்டன் ஒருவரும் இராணுவச் சிப்பாய் ஒருவருமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -