அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சைக்கு தயார்படுத்தல் கருத்தரங்கு – 2019

பி.எம்.எம்.ஏ.காதர்-

2019 இம்மாதம் ஜனவரியில் கல்வியமைச்சின் கீழுள்ள பாடசாலைகளுக்கு அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது.இப் போட்டிப் பரீட்சைக்கான தயார்படுத்தல் கருத்தரங்கு புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் 2019.01.12 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இக்கருத்தரங்கில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு ஆகிய பாடங்கள் சிறப்பாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.சம்பவக் கற்கை பாடநெறி பிரபல நூலாசிரியர் ஆ.ஐ. முஹம்மது அலி ஜின்னா (SLEAS) அவர்களினால் எதிர்வரும் வாரங்களில் நடாத்தப்படும்.இதில் பொது அறிவு நுண்ணறிவு பாடங்களுக்கு நாடளாவிய ரீதியில் அனுபவமும் தேர்ச்சியுமிக்க வளவாளர்களான U.L.M. முதைதீன் - (SLEAS), யு.ஆ. றியாஸ் (ஊடகக் கற்கை) ஆகியோரின் பிரதான வழிகாட்டலில் விரிவுரைகள் இடம்பெறவிருக்கின்றன.


எனவே மேற்படி கருத்தரங்கு வடமேல்,வடமத்திய, மேல், மத்திய, வட மாகாண பரீட்சாத்திகளின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே மேற்படி போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறுவதோடு வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகின்ற பட்டதாரிகளும் கலந்து பயன்பெறலாம். தொடர்புகளுக்கும் பதிவுகளுக்கும் பின்வரும் இலக்கங்களோடு தொடர்பு கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -