நோட்டன் பிரிட்ஜ் எம் கிருஸ்ணா-
போதை வஸ்தை ஒழித்து நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு இன்று மணவர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கப்படுள்ளது, உங்களுடன் நாமும் கைகோர்த்து நாட்டில் போதை வஸ்தை இல்லாதொழிக்க திடசங்கட்பம் பூணுவோம் என நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் எம். இராமச்சந்திரன் தெரிவித்தார்,
ஜனாதிபதியின், விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதை வஸ்து ஒழிப்பு திட்டத்தின் இறுதி நாளான 25 இன்று அட்டன் கல்வி வலயம் கிளவட்டன் த. வி யில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
வித்தியாலயத்தின் அதிபர் எம் .விசுவாசம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வலய கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் துரைசிங்கம், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரி, ஒஸ்போன் குரூப் வைத்திய அதிகாரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்
போதை வஸ்த்து யாதொன குறிப்பிட்டு கூற முடியாத தற்போதைய காலகட்டத்தில், ஒரு மனிதன் தன்னை மறந்து எதில் ஆள ஊடுறுவி தனிமைபடுத்தப்பட்டு மயக்க நிலையை அடைந்து சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றானோ அவையாவும் போதை வஸ்தாகவே கருதவேண்டியுள்ளது
அந்த வகையில் மதுபானம், போதை மாத்திரைகள், போதை பொருட்களுடன் சமூக வலைதளங்களும் போதை பொருளுக்குள் இணைந்து விட்டதெனலாம், சமூக தளங்களில் மோகம் கொண்ட இளம் சமூகத்தினர், பொது நிகழ்வுகள் சமய நிகழ்வுகள், குடும்பங்ளில் உறவுகளை பேனுதல், போன்ற சகல விடயங்களிலிருந்து விலகி முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலே காலத்தை கழிக்கும் இக் காலத்தில் இதுவும் ஒரு வித போதை வஸ்தென்றால் மிகையாகாது
போதை பொருட்களை பாவிக்கும் ஒருவன் ஆரோக்கிய வாழ்வை இழந்து நோயாளியாகி, சமூகத்தில் நட் பிரஜை என்ற நிலையிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றான், இவ்வாறான இக் காலகட்டத்திலே மனிதனையும் மீட்டு நாட்டையும் போதையிலிருந்து மீட்டொடுக்க மாணவர்களாகிய உங்களிடம் , இன்று நாங்கள் மண்டியிட்டுள்ளோம்
ஐக்கிய நாடுகள் சபையினால் 1987 ம் ஆண்டுமுதல் பிரகடணப்படுத்தப்பட்ட போதை ஒழிப்பு தினம் ஆண்டுதோரும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலுல் போதைஒழிப்பு திட்டத்தினூடாக சிறந்த பெருபேருகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என தெரியாத நிலையிலே,
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழ மொழியை கருத்தில் கொண்டு சிறுவர்களாகிய உங்களினூடாக தீய செயலாகவும் பேழிவையும் கொடுத்து கொண்டிருக்கும் போதை வஸ்தை ஒழிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் சிறுவர்களாகிய உங்களினூடாக போதை வஸ்தினால் ஏற்படும் பக்க விளைவுகளை பெற்றோர்கள் உள்ளிட்ட எம் சமூகத்தின் பால் கொண்டு செல்லும் பட்டத்தில் நிகழ்கால சமூகத்தையும் எதிர்கால சந்ததியையும் மீட்டெடுத்து சிறந்த நாடாகவும் சிறந்த மனிதர்களையும் உறுவாக்க முடியும் என என்னுகிறோன் எனவே மாணவர்களினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தினை வெறிப்பாதையில் இட்டு சென்று இலக்கை அடைய நாங்களும் உங்களோடு கைகோர்கின்றோம் எனத்தெரிவித்தார்.