அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முதலாவது பொதுச் சபைக் கூட்டம் இன்று (27)

எஸ்.அஷ்ரப்கான்-
கில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முதலாவது பொதுச் சபைக் கூட்டம் இன்று (27) தலைமைக் காரியாலயத்தில் தேசியத் தலைவர் எம்.என்.எம். நபீல் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம்.றிஸ்மி, பொருளாளர் றிஸ்வி பாறுக் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட "வை" கிளைகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு தேசியத் தலைவர் எம்.என்.எம்.நபீல் உரையாற்றும் போது,

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது பேரவை காலாகாலமாக பல்வேறு தேசிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அது போன்று ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் நாங்கள் சிந்தித்து செயற்படுத்த வேண்டும். அது போன்று தேசிய பிரச்சிகளை இனம் கண்டு அதற்கான தீர்வுகளை இயலுமான வரை செயற்படுத்த முன்வர வேண்டும். புதிய அங்கத்துவ ''வை" களை சேர்த்துக் கொள்ளவும் நாம் தலையகத்தினூடாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த சமூக சேவை என்பது எமது உறுப்பினர்கள் அனைவருக்குமான அமானிதம் அதனை பொறுப்போடு நாம் செய்ய முனைவோம்.
அழகிய செயற்பாடுகளுடன் கூடிய அர்ப்பணிப்பு மூலம் நாம் எமது சமூகத்திற்கு மட்டுமல்லாது ஏனைய சமூகங்களுக்குமான உதவிகளை நாம் செய்ய முனைய வேண்டும். அதனூடாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அது மட்டுமல்ல விளையாட்டுத் துறையை இந்நாட்டில் உள்ள மூவின இளைஞர் யுவதிகளையும் பங்கிட்டுக்கச் செய்து அதனூடாகவும் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். இதற்கு காரணகர்த்தாக்களாக வை.எம்.எம்.ஏ. பேரவை திகழ வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்.
எமது இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி, புலமைப் பரிசில் வழங்கல், கணினிக் கல்வி, சிரமதானம், க.பொ.த. சா/தரம், உயர் தரம், 5 ஆம் ஆண்டு புலமை மாணவர்கள் ஆகியோருக்கு கல்விக் கருத்தரங்கு போன்ற பல சேவைகளை தொடர்ந்தும் சிறப்பாக செய்து வருவது பாராட்டப் பட வேண்டியதாகும் என்றும் கூறினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -