கந்தளாய் லங்கா சீனித் தொழிற்சாலையில் கடமை புரியும் 36 ஊழியர்களுக்கு ஒரு வருட காலமாக அரசாங்கம் சம்பளம் வழங்கப்படவில்லையென அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இன்று (17)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையிலே:
கடந்த 2018 ஆம் ஆண்டு ஐனவரி மாதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு ஐனவரி வரை எந்தவிதமான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லையென்றும் இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
ஐந்து மாதங்கள் நூற்றுக்கு ஐந்து வீதம் கொடுப்பனவு மட்டுமே இது வரை கிடைத்துள்ளதாகவும் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லையென தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக அரசாங்கத்தின் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரமாக ஸ்தீர தனமற்ற அமைச்சுகள் மாறி மாறி கையளிக்கப் பட்டதால் தாம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக லக்ஸ்மன் கிரியெல்ல வசம் அமைச்சு இருந்ததால் சம்பளப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கும் ஊழியர்கள் தற்போது நவின் திஸாநாயக்க வசம் உள்ளதாகவும் அமைச்சரிடம் சம்பளத்தினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவ்வாறு இல்லையெல் எமது தொழிலை நிறுத்தி விட்டு ஊழியர் சேமலாப நிதியை தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த ஒரு வருட காலமாக சம்பளம் இல்லாமையால் வங்கிகளில் பெற்ற கடனை திரும்பி செலுத்த முடியாத நிலையிலுள்ளதாகவும்,36 ஊழியர்களும் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ளதாகவும் மின்சார கட்டணம்,தண்ணீர் கட்டணம் போன்றவற்றினை செலுத்த முடியாத நிலையிலுள்ளதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் பல இக்கட்டான நிலைக்கு முப்பத்தாறு ஊழியர்களும் தள்ளப்பட்டு விடுவோம் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.