37 வருடகால அரச சேவையிலிருந்து கல்முனை பிராந்திய சிரேஷ்ட உணவு மருந்துகள் பரிசோதகர் அல்-ஹாஜ் சம்சுதீன் தஸ்தகீர் ஓய்வு பெற்றார்.
கடந்த 28.12.2018 ல் ஒய்வு பெற்ற சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்-ஹாஜ் சம்சுதீன் தஸ்தகீர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிறா கல்லூரியிலும் பயின்றார் . இவர் பொதுச் சுகாதாரம் ஆங்கிலம் , கணினித்துறை, திட்ட முகாமைத்துவம், உணவு மற்றும் பானங்கள் முகாமைத்துவம், ஹோமியோபதி போன்ற துறைகளில் " டிப்ளோமா " பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அரச சேவையில் 37 வருடங்கள் சிறந்த சேவைகள் செய்துள்ள இவர், இலங்கை சாரணர் சங்கத்தின் பயிற்சிக்குப் பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளராகவும் , இலங்கை சென் ஜோன் முதலுதவிப் படையின் உதவி மாவட்ட ஆணையாளராகவும், அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய உப தலைவராகவும் , இலங்கை COPSITU சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவராகவும் , அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் பேரவை (AII , Ceylon YMMA) இன் போதைப் பொருள் தடுப்புக்கான தேசிய செயற்திட்டத் தவிசாளராகவும் , அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராகவும், நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும் , அகில இலங்கை உணவு மருந்துகள் பரிசோதகர் சங்கத்தின் தேசிய கணக்குப் பரிசோதகராகவும் (Auditor) ஆகவும் , மனித வள அபிவிருத்தியும் சகோதரத்துவமும் ,(HDBO) அமைப்பின் ஸ்தாபகத் தலைவராகவும் AMAN SRILANKA அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் , கல்முனை ஹரிகெயின்ஸ் விளையாட்டுக் கழத்தினது தலைவராகவும் செயற்பட்டு சமூகத்துக்கும் நாட்டுக்கும் அரும்பணிகள் ஆற்றி வருகின்றார் .
இவர் ஜப்பான் , இந்தியா , தாய்லாந்து சவூதி அரேபியா போன்ற நாடுகளில் துறைசார் உயர் பயிற்சிகளையும் , சாரணியத்தில் உதவித் தலைமைப் பயிற்றுனர் (CALT) எனும் உயர் பயிற்சியையும், சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் மானுட சேவையில் Serving . Brother St . John (Queen Elisabath) Award எனும் உயர் விருதினையும் பெற்றுள்ளார். இவர் நாடறிந்த எழுத்தாளருமாவார் . இவர் தினகரன் , டெய்லிநியூஸ் , வீரகேசரி மற்றும் இதரபத்திரிகைகளில் பல விஞ்ஞான மற்றும் இதர கட்டுரைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்களை எழுதி பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
இவர் லேக் ஹவுஸ் நிறுவன தேசிய பத்திரிகைகளின் கல்முனை பிரதேச நிருபராகவும் கடைமையாற்றுகின்றார்.
இவரது ஓய்வுக்காலம் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்.