பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, பெவதிஹட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இனம், மதம் தொடர்பில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறு, குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நாட்டுக்கு பாதகமாக கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு பதிலாக, கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஞானசாரரை விடுதலை செய்யாவிட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -