பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் உடலத்தை 09.01.2019 அன்று தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னாள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் 06.01.2019 அன்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி, தாயின் தங்கையிடம் வளர்வதாகவும், 5 வருடங்களுக்கு முன்பு சிறுமியை தங்கையிடம் ஒப்படைத்து விட்டதாகவும், குறித்த தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி மாதம் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.