A/L எழுதிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் எவ்வாறான கற்கைநெறிகளை தெரிவு செய்வது தொடர்பிலான செயலமர்வு.



எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்த வருடம் 2018 யில் உயர்தரப்பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விண்ணப்பப்படிவத்தினை எவ்வாறு பூர்த்தி செய்வது தொடர்பாகவும் தமது கல்வித்தகமைக்கு ஏற்ப எந்த கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வொன்று (20) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் விண்ணப்பப் படிவம் நிரப்புவதில் ஏற்படும் தவறுகள் காரணமாக பல்கலைக்கழக வாய்ப்புக்களை பலர் கடந்த காலங்களில் இழந்துள்ளனர். இதனைத் தவிர்ப்பதற்காக வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் ESDA எஸ்டா நிறுவனத்தினால் முற்றிலும் இலவசமாக இச் செயலமர்வு நடாத்தப்பட்டது.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் ஏ.ஆர்.முகைதீன் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் வளவாளர்களாக ஆதில் அஹமட், ஏ.எம். வசீமுல்லாஹ், மஹீஸ், மற்றும் முஸ்தாக், ரிபாஸ் தன்சீல், ஆகியோர்கள் விரிவுரைகளை நடாத்தினார்கள். இச் செயலமர்வில் பிரதேசத்திலுள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -