உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமிவிபுலாநந்தர் பிறந்த காரைதீவுமண்ணில் ஒரு தேசிய பாடசாலை இல்லை!


கிழக்கு ஆளுநரிடம் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் தெரிவிப்பு!
காரைதீவு நிருபர் சகா-
லகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த
அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் ஒரு தேசிய பாடசாலை இல்லாதது
பெருங்குறையாகவுள்ளது.கிழக்கின் புதிய ஆளுநரான தாங்கள் இக்குறையை தீர்த்துவைப்பீர்கள் என பெரிதும் நம்புகின்றேன்.

இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாவிடம் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்தார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (18) பிற்பகல் அம்பாறை
மாவட்ட உள்ளுராட்சிமன்றத் தலைவர்களுடனான ஒரு சந்திப்பொன்றில் கிழக்கின் புதிய ஆளுநர் கலந்துகொண்டார். முதலமைச்சின் செயலாளர் அசீஸ் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் எ. றாபிஆகியோரும் கலந்துகொண்டனர்
அங்கு பேசுகையிலே தவிசாளர் ஜெயசிறில் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார்.அவரது முழுப்பேச்சையும் செவிமடுத்தபின்னர் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கூறுகையில்:

காரைதீவில் தேசியபாடசாலையொன்று இல்லையா? கற்றவர்கள் நிறைந்த ஊரில் இந்நிலையையிட்டு கவலையாகவிருக்கிறது. உடனடியாக அதற்கான ஆவணங்களைத்திரட்டி எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்பதாக என்னிடம் தாருங்கள்.சிபார்சுசெய்கிறேன் என்றார்.

தவிசாளர் ஜெயசிறில் மேலும் அங்கு பேசுகையில்:
கடந்தகாலங்களில் எமது காரைதீவுபிரதேசசபை அரசின் வளப்பங்கீட்டில்
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. பொதுவாக தமிழ்ச்சபைகள்
புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன.
தமிழ்முஸ்லிம் பிரதிநிதிகளைக்கொண்ட எமது சபை குறைந்த வருமானத்துடன் சிறந்த சேவையாற்றி கிழக்கில் முன்னணியில் இயங்கிவருதை அறிவீர்கள்.
ஆளணிப்பற்றாக்குறை நிலவுகிறது. ஓரிரண்டுபேரை குறுக்குவழியால் எமக்குத் தெரியாமல் நியமிக்கிறார்கள். இது எமது உரிமையைமீறும்செயலாகும்.
சபைக்கு போதிய வாகனங்கள் இல்லை. திண்மக்கழிவு அகற்றலைத்திறம்பட செய்துவரும் எமக்குத் தேவையான வாகனங்கள் இல்லை. இரு உழவுஇயந்திரங்களும் பழுதடைந்திருக்கிறன.ஜேசிபி இயந்திரம் 3மாதமாக இயங்காமல் பழுதடைந்திருக்கி;ன்றது.

மிகவும் பழைய வாகனம் ஒன்றுதான் நான் பயன்படுத்துவது. அடிக்கடி
பழுதாகின்றது.தள்ளித்தான் ஸ்டார்ட் எடுக்கவேண்டியுள்ளது. தள்ளுவதற்கு
ஆள்கொண்டுபோகவேண்டியுள்ளது. எனவே புதிய வாகனத்தின் தேவை எழுகின்றது.
இது தொடர்பாக உரியதரப்புகளுடன் பேசி வாகனத்தைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஆளுநர்.
சபையின் காணி படையினர் வசம்!
எமது சபைக்குச்சொந்தமான பிரதானவீதியிலுள்ள காணியை நீண்டகாலமாக படையினர் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் அதில் அரைவாசிக்காணியைத் தருவதாக இருந்தது. அதுவும் இப்போது இல்லையெனத்தெரிகிறது.
எனவே அதனை முற்றுமுழுதாகப் பெற்றுத்தரவேண்டும். நாம் அதில் நிரந்தர
மார்க்கட் ஏற்படுத்தி சபைக்கு வருமானம் பெறுவதற்கு விரும்புகின்றோம்.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இதனை இராணுவத்தளபதியுடன்பேசி பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாட்டில் எமக்கு கல்முனை மாநகரசபை
35லட்சருபா தரவேண்டியுள்ளது.நாம் அட்டாளைச்சேனைக்கு 15லட்சருபா
கொடுக்கவேண்டியுள்ளது. இது தொடர்ந்தால் அதனைமுடக்க நேரிடும். என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -