தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் சமூக வலைத்தள பாதுகாப்பு, பயன்பாடு, அது தொடர்பான சட்டம், மற்றும் முறையற்ற பயன்பாட்டுக்கான தண்டணை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
கல்முனை பிரதேச செயலகத்தின் கேடப்போர் கூடத்தில் கல்முனை பிரதேச இளைஞர் சேவைமன்ற நிர்வாக உத்தியோகத்தகர் ஏ.எல்.எம்.அஸீம் தலைமையில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றது .
இவ் நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சூதின் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆசிரியர் கே. நிமலரூபன் ஆகியோரால் சமூக வலைதளம் தொடர்பாக அதன் நன்மை தீமை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது அத்துடன் இளைஞர்களினால் சமூக வலைத்தளம் தொடர்பாக வினாக்கள் தொடுக்கப்பட்டு அதற்கான பதிலும் வழங்கப் பட்டன இதில் சுமார் 50க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்
மேலும் விசேட அதிதிகளாக.
தேசிய இளைஞர் மன்றத்தின் மாகணப்பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் பி.தியாகராஜா
மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.டி.எம்.ஹாரூன் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பி.எம்.ரியாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.