திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில் தீவு குசைனியா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கான ஒளி பெருக்கி உபகரணங்கள் இன்று (22) செவ்வாய்க் கிழமை தம்பலகாம பிரதேச செயலகத்தில் வைத்து துறை முகங்கள் மற்றும் கப்டல் துறை பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் பள்ளிவாயல் நிருவாக சபையிடம் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உபகரணங்களானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி உட்பட பலர் பங்கேற்றார்கள்.