ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹட்டோவிட்ட மத்திய குழுவின் கோரக்கைக்கு அமைய, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களது நிதியொதுக்கீட்டில், கம்பஹா மாவட்டத்தின் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் தையல் இயந்திரம், சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் அல் ஹாஜ் ஜவ்ஸி, அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர்களான அஸாம் பாஸ், ரம்ஸான், ரிஷான், ஸரூக் மற்றும் ஜனநாயக ஐக்கிய மக்கள் காங்கிரஸின் தலைவர் சுஹைல், செயலாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நாஸர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.