நிந்தவூரில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியசாலை ஞாயிற்றுக் கிழமை [20.01.2019] திறந்து வைக்கப்படவுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இந்த நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளரும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகருமான டாக்டர் எம்.நபீல் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்,கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.சிறிதர்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஊடகப் பிரிவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -