தமிழ் கூட்டமைப்பு ஹாபிசை முதலமைச்சராக ஏற்றதாம். ஹிஸ்புல்லாவை ஏற்க முடியாதாம்.
முதலில் தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் டயஸ்போராவின் அடிமைகள் என்பதை நாம் புரிய வேண்டும்.
தமிழ் கூட்டமைப்பு ஆதரித்த ஹாபிசும் சந்தர்ப்பவாதிதான். மு.காவை கடுமையாக எதிர்த்தவர். மு. காவில் நின்றால் வெல்லலாம் என சந்தர்ப்பம் பார்த்து மாறியவர். அவர் மு. காவை சேர்ந்தவர் என்பதாலும் ஹாபிசை ஏற்பதால் உங்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கும் என்பதாலும் தமிழ் கூட்டமைப்பினர் நீங்கள் அவரை ஆதரித்தீர்கள்.
உலக மகா பயங்கரவாதியான புலியுடன் இருந்த பிள்ளையான் கூட கிழக்கின் முதலமைச்சராக இருந்துள்ளார். அவரை முன்னாள் புலி என முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்த போது அதனை நாம் கண்டித்தோம். முன்னாள் பயங்கரவாதியான பசீர் முஸ்லிம் காங்க்ரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்த பிள்ளையான் தேர்தலில் நிற்பது அவரது ஜனநாயக உரிமை என்பதை உலமா கட்சி மட்டுமே பகிரங்கமாக கூறியது.
பிள்ளையானை ஹக்கீம் கோஷ்டியினர் எதிர்க்க காரணம் தமிழர் கூட்டமைப்பும் அவரை எதிர்த்ததால். இத்தனைக்கும் கூட்டமைப்பில் உள்ள தமிழ் கட்சிகளும் உலக மகா கொலைஞர்கள், கொள்ளைக்காரர்கள்.
ஆனாலும் ஜனநாயகத்துக்கு வந்த கிழக்கான் என்பதால் நாம் பிள்ளையானைக்கூட முதலமைச்சராக ஏற்றவர்கள்.
எந்தவொரு கொலையும் செய்யாத, ஊழல் செய்யாத, ஹிஸ்புல்லாவை ஏன் தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்று கேட்கிறோம். தமிழர்களை கொன்றொழித்த சிங்கள மேஜர்கள்கள் ஆளுனர்களாக இருந்ததை ஏற்றுக்கொண்ட தமிழ் கட்சிகள் ஆயுதம் தூக்காத, ஜனநாயக அரசியல் மூலம் அறிமுகமான ஹிஸ்புல்லாவை எதிர்ப்பது முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கெதிரான இனவாதமாகும்.
-உலமா கட்சி