தொடரும் குடிநீர் அவலம்.

தாகம் தீர்க்கும் கிணறுகள் அமைக்கும் பணியில் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள்.
குடிநீரின்றி சிரமப்படும் ஆசிகுளம், புதுக்குளம், அம்பலாங்கொடல்ல,எட்டமேகஸ்கட,கணேசபுரம்.மேனிக்பாம். பாவற்குளம்,மணிபுரம் பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் ஐ.எஸ்.ஆர்.ஸி நிறுவனத்தின் அனுசரணையில் குழாய்க் கிணறுகளை நிர்மாணித்து சூரியபடல் (Solar power) மின்சக்திமூலம் தாங்கிகளுக்கு நீரேற்றி வழங்கும் தொகுதிகளை அமைத்து இன்று மேற்படி பிரதேச மக்களுக்கு கையளித்தார்.
ஒவ்வொன்றும் ஏழரை இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கிணற்றுத் தொகுதிகளில் நிர்மாணிப்பு பணிகள் முடிந்தவைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன.
ஏனைய கிணறுகளின் நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தி அடைந்தவுடன் அவைகளும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களும் ஐ.எஸ்.ஆர்.ஸி நிறுவுனர் ஜனாப். மிஹ்லார் ஆகியோர் இத்தொகுதிகளை மக்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -