கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காக வர்த்தகர்கள் தொடர்ச்சியாக பணத்தை வழங்குகின்றனர் என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில்.
கோட்டாபாய தனது பிரஜாவுரிமையை இரத்துச் செய்யுமாறு கோரி அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதன் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடமாட்டார் என ராஜபக்ச குடும்ப தகவல்கள் தெரிவித்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அரசியல் பிரமுகர் ஒருவர் கருத்துத்தெரிவிக்கையில்,
நான் அறிந்தவரையில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் கோட்டாபாய ராஜபக்சவிற்கு இல்லை, இருப்பினும் தான் தேர்தலில் போட்டியிடுவேன் என கோட்டாபாய பலரை நம்பவைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார் என செய்தி வெளியிட்டுள்ளது என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தகர்கள் அவரிற்கு நாளாந்தம் பெருமளவு பணத்தை வழங்குகின்றனர் இதன் காரணமாகவே கோட்டாபாய ராஜபக்சவினால் கொழும்பில் ஆடம்பர வாழ்க்கை வாழமுடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கோட்டாபாயவே இவர்களின் முட்டாள்தனத்தை கேலி செய்வார் என தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே இந்த வர்த்தகர்கள் தங்கள் முட்டாள்தனத்தை உணருவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன.ஐபிசி