போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை - ஆளுநர் அஸாத் சாலி


ஐ. ஏ. காதிர் கான்-
மேல் மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக விசேட வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினையும் நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
பொலிஸ் பிரிவிலுள்ள அதிகாரிகளையும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரையும் புதிய திட்டமிடலில் இணைக்கவுள்ளோம்.
மேல் மாகாணம் முழுவதும் போதைப்பொருள் தயாரித்தல், பொதி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு புதிய திட்டம் வகுக்கவுள்ளோம்.
பிரதானமாக, பாடசாலைகள் மற்றும் மத ஸ்தலங்களை அண்டிய பகுதிகளில் இவ்வாறான போதைப்பொருள் விற்பனைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
அந்த வகையில், மதஸ்தலங்கள் ஒருங்கிணைந்து அந்தந்தப் பகுதிகளின் சூழலைப் பாதுகாக்கவும் அறிவுறுத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் காணப்படும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை, ஒழுங்காக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அஸாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -