கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மீன்பிடி வீதியிலுள்ள வீடொன்றில் பெரியதொரு குளவிக்கூடு அமைந்துள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்திடல் மிக நீண்ட காலமாக குளவிகள் கூடமைத்துள்ளது இதில் பெருந்தொகையான குளவிகள் காணப்படுகிறது இக் குளவிகள் சில நேரங்களில் கலைந்து சென்று வீடுகளுக்குள் வருவதால் மிகவும் சிரமமாகவுள்ளது. சிறுபிள்ளைகளை வைத்திருக்கும் நாங்கள் பிள்ளைகளுக்கு கொட்டி விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொருநாளும் இருந்து கொண்டிருக்கின்றோம்.
இது தொடர்பில் பிரதேச சபை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இன்னும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த குளவிக் கூட்டை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.