இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை- அமைச்சர் ரிஷாட் !


ஊடகப்பிரிவு-


ற்போதைய அரசோ இஜனாதிபதியோ பிரதமரோ ஒருதீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அதுசாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை (24) அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புவிழாவில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர் முத்து முஹம்மது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது ;


பாராளுமன்றத்தில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து தென்னிலங்கையில் மிகவும் மோசமான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. நாட்டை பிரிவினைக்கு இட்டுசெல்லுமென தென்னிலங்கையில் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழர் பிரதேசத்தில் ஒருவகையான பிரசாரம்- முஸ்லிம் பிரதேசத்தில் இன்னுமொரு வகையான பிரசாரம்இ தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்டும் பிரசாரம் என்று இந்த நகல் அறிக்கையானது ஆளுக்கொருவிதத்தில் கூறு போடப்பட்டு ஒவ்வொருசாராரும் தத்தமது அரசியல் இருப்புக்காகவும் ஆதாயத்திற்காகவும் அதனைக்கையில் எடுத்துள்ளனர். தமிழிலே ஒன்றிருப்பதாகவும் சிங்களத்திலே வேறொன்று இருப்பதாகவும் ஊடகங்கள் சிலவும் இந்த பிரசாரங்களை வரிந்து கட்டிக்கொண்டு முன்னெடுத்து வருகின்றன.


ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு தென்னிலங்கையின் சில கட்சிகள் இதனை ஒரு கருவியாக எடுத்துஇ இல்லாத பொல்லாத விடயங்களை சோடித்து கதைகளை கட்டவிழ்த்துள்ளன. எப்படியாவது இந்த தீர்வுத்திட்ட முயற்சியை இல்லாமலாக்க வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த சூழ் நிலையில் வெறுமனே நூறு ஆசனங்களை கொண்ட பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு இதனை நிறைவேற்றப்போகின்றது ? அத்துடன் 85 ஆசனங்களைக்கொண்ட மகிந்த தரப்பினர் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாராளுமன்ற ஆயுட்காலத்துக்குள் எவ்வாறு அரசாங்கம் இதனை நிறைவேற்றப்போகின்றது? பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளுக்கிடையில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளும் இ ஏட்டிக்குப்போட்டியான செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் போது இதனை நிறைவேற்றுவது சாத்தியமாக தென்படவில்லை . அதுமாத்திரமன்றி 3ஃ2 பெரும்பான்மை அதாவது 150 வாக்குகளால் இது நிறைவேற்றப்பட வேண்டும் . அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் . இந்த இக்கட்டான நிலையில் தீர்வுத்திட்டம் பற்றிய ஒரு நம்பிக்கையை இந்த அரசாங்க காலத்தில் நாம் எதிர் பார்க்க முடியுமா ?


தேர்தல் வந்துவிட்டால் தீர்வுத்திட்டத்தை அப்படி உருவாக்குவோம்இ இப்படி உருவாக்குவோம் என்று வாக்குறுதி தரும் நிலையே இருந்துவருகின்றது.


இந்த நாட்டிலே வடக்கிலே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியமைக்கும் தென்னிலங்கையில் இளைஞர்கள் ஆயுதக்கிளர்ச்சி நடத்தியமைக்கும் மூல காரணம் பேரினத்து அரசியல்வாதிகளேஇஇவ்வாறான பிரச்சினைகளின் ஆரம்பக்கர்த்தாக்களும் அவர்களேதான்.


எனவே இந்த நாட்டிலே இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டு நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமெனில் மூவின மக்களினது பிரதிநிதிகளும் மனம்விட்டு பேசி எல்லோருக்கும் பொருத்தமான ஒரு தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டு அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும் .இதுவே காலத்தின் தேவையாக இருக்கின்றது . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -