பல்கலைக்கழக பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களின் ஆலோசனையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு வருடாந்தம் பல ஆயிரம் ரூபாய்கள் மிகுதியாக கிடைக்கவுள்ளன.
நிலத்தோற்ற, பூந்தோட்ட வேலைத்திட்டங்களின் போதான மேலதிக செலவுகளை குறைக்கும் நோக்கில் பொறியியலாளர் இஹ்ஸான் அவர்களினால் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகின்ற மரங்களை நேர்படுத்துதல், பூமரங்களை வரிசைப்படுத்துதல், படர்கொடிகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு தேவைப்படுகின்ற தும்பு கயிறு, நைலோன் கயிறு, இரும்பு வலைகள், இரும்பு படர்கொடிகள் போன்றவற்றிற்கு வருடாந்தம் பல ஆயிரம் ரூபாய்க்கள் செலவாகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஸ்ரீ லங்கா டெலிகொம் தங்களது பாவனைக்கு தேவையில்லை என ஒதுக்குகின்ற பழைய வயர்களை பாவிப்பதன் மூலம் வருடாந்தம் பல ஆயிரம் ரூபாய்க்களை மீதப்படுத்தலாம் என்பதே அந்த ஆலோசனையாகும்.
வணிகம் மற்றும் முகாமைத்துவ கற்கைகளுக்கான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அருண குமார அவர்களின் பாராட்டுதலுடன் தனிப்பட்ட முறையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களினால் ஸ்ரீ லங்கா டெலிகொம் தலைமையகத்துடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியின் பயனாக ஜனவரி-1 ஆம் திகதி ஒரு பகுதி டெலிகொம் வயர்கள் கிடைத்துள்ளன. பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களின் இந்த முயற்சியை பல்கலைக்கழக வளாகம் பாராட்டியுள்ளது