காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை துபாய் சென்றடைந்தார். துபாய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துபாய் சென்றுள்ள ராகுல் அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் சிந்தும் வியர்வை, ரத்தத்தினால் இந்த நாட்டை வளப்படுத்தி வருகிறீர்கள். உங்களால் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் அடைகிறோம்
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.