பாடசாலை போதைப் பொருள் தடுப்பு வாரத்தின் இறுதி நிகழ்வாக “போதைக்கு எதிரான பாடசாலையின் பலம்” எனும் தலைப்பின் கீழ் அக்கரைப்பற்று வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அல்- அர்ஹம் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான செயலமர்வு கருத்தரங்கு இன்று(25) பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஓ.எல்.எம்.றிஸ்வான் உரையாற்றும் போது எமது இலங்கை தாய்நாட்டின் பெருமைமிக்க பிரஜைகளாகிய நாம் முழு நாட்டிற்கும் அழிவை ஏற்படுத்தும் மதுசாரம்,கஞ்சா,சிகரட் உட்பட பல போதைப் பொருட்களின் பாவனையை ஒழிப்பதற்கு அனைவரும் இணைந்து பாடசாலையிலும், கிராமிய மற்றும் தேசிய மட்டத்தில் செயற்படுத்தப்படும் மதுவிலிருந்து விடுதலை பெற்ற நாடாக மாற்றுவதற்கு மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும் எனவே, இதற்கு சகல மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.