திருகோணமலையில் உள்ள துறை முகங்கள் அதிகார சபைக்கு துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் இன்று (18) விஜயமொன்றை மேற்கொண்டார்.
திருகோணமலை துறை முக அதிகார சபையின் முகாமையாளர் கே.ஏ.கே.எம்.டபிள்யூ வீரசிங்க அவர்களுக்கும் பிரதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்புக்கள் இதன் போது இடம் பெற்றன .
துறை முகங்கள் தொடர்பான குறைகள் மேலும் குறைகளை தனது கவனத்திற்கு கொண்டு வரூமாறும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடன் நிவர்த்தி செய்வதாகவும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் திருகோணமலை இயற்கை துறை முகமானது வருமானத்தை மேலும் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் மேற்கொள்வதாகவும் தங்களது ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தனக்கு முன்வைக்குமாறு முகாமையாளருக்கு கட்டளை பிறப்பித்தார்.
துறை முக அதிகார சபை உத்தியோகத்தர்கள் பிரதியமைச்சரை உற்சாக வரவேற்பளித்தனர்.
இச் சந்திப்பில் துறை முக பொறியியலாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் பிரதம பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் பங்கேற்றார்கள்.