தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

யூ. கே. காலித்தீன்-
சாய்ந்தமருது வொலிவரியன் கிராமத்தில் அமைந்துள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.ஏ. நாபித் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பின் இறுதி நாளான நேற்று (25) வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுடனா காட்சிப்படுத்தல் தொடர்பான தொனிப்பொருளில் பாடசாலை வளாகத்திலிருந்து வொலிவரியன் கிரமத்தில் விழிப்பூட்டுவதற்காக மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்வலமாக சென்றது.

இதேவேளை, விழிப்புணர்வு ஊர்வலத்தில் எதிர்கால சந்ததியாகிய எங்களை போதைப் பொருட்களிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு உதவி செய்யுங்கள், போதைப்பொருள் பாவனையினால் எதிர்கால சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது, புகைத்தல் அற்ற குடும்பங்களை உருவாக்குவோம், ஒழுக்க நெறி நிறைந்த சுபீட்சமான கிராமத்தை கட்டி எழுப்புவோம், எங்களின் எதிர்காலத்தை கொலைசெய்யாதீர் போன்ற பல சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -