காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான கபொத. உயர்தரப்பரீட்சைப்பெறுபேறுகள் சிறப்பாக இருப்பதாக அதிபர் திருநா.வித்யாராஜன் தெரிவித்தார்.
மருத்துவத்துறையில் குலேந்திரன் இந்துஜன் சண்முகலிங்கம் குமரன் ஆகிய இருமாணவர்களும் 2ஏபி பெற்று மாவட்டத்தில் முறையே 7ஆம் 22ஆம் நிலையிலுள்ளனர்.
பொறியியல் துறையில் மகேந்திரன் சோவனா (2ஏபி)திவாகரன் ருசன்னியா(எபிசி) மணிச்சந்திரன் தக்ஸ்விகன்(எபிசி) ஆகியோர் முறையே 23ஆம் 35ஆம் 53ஆம் நிலையிலுள்ளனர்.
கலைத்துறையில் யோகராசா பிரியா சூரியகுமார் கீர்த்திகா ஆகியோர் 3ஏ பெற்று மாவட்டத்தில் 10ஆம் 36ஆம் நிலையிலுள்ளனர். குணசேகரன் றோஜி 2ஏபி பெற்று மாவட்டத்தில் 13ஆம் நிலையிலுள்ளார்.
உயிரியல்துறையில் சுந்தரகுமார் ரணுஜா எபிசி பெற்று மாவட்டத்தில் 88ஆம் நிலையிலுள்ளதோடு மேலும் பல மாணவர்கள் இதற்கடுத்ததான சித்திகளைப்பெற்றுள்ளனர்.
இந்தச்சிறப்புச்சித்திகளையிட்டு பாடசாலைச்சமுகம் தமது நன்றிகளை உரியவர்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளது.