மட்டக்களப்பு- கொம்மாதுறை பிரதேசத்தில் - கடந்த 2ம் திகதி கிரான் பிரதேச செயலக மீள்குடியேற்ற உத்தியோத்தர் தலைமையில் சென்ற தமிழ் இளைஞர் குழுவொன்று - குறித்த அப்துல் காதர் என்பவரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தி காடைத்தனமான முறையில் இனவாதத்தாக்குதல் மேற்கொண்ட காட்சி வீடியோப்பதிவாக வெளிவந்துள்ளது.
இன வேறுபாடின்றி கடமை புரிய வேண்டிய அரச உத்தியோகத்தரும் அவரது கும்பலும் ஒரு அப்பாவிப் பொதுமகனை நிர்வாணமாக துன்புறுத்தி, அதனை வீடியோப்பதிவு செய்து வெளியிட்டமை மனிதாபிமானத்திற்கெதிரான மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு, அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ள இவ்வாறானவர்களிடமுள்ள அரச பதவி பறிக்கப்பட வேண்டும்.
கிழக்கில் இரு இனங்களுக்கிடையேயும் நல்லுறவு வலுப்பெற்று வரும் நிலையில், இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபடுவோர் எதிர்பார்ப்பது என்ன? இன உறைவை சீர்குலைத்து தங்களின் அடைவுகளை அடைந்து கொள்ள எத்தனிப்பதாகவே உணர முடிகிறது.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் எச்ச சொச்சங்கள் இன்னும் எஞ்சியுள்ளதென்பதை இவ்வாறான செயற்பாடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.கிழக்கில் முஸ்லிம்களுக்கெதிராக இடபெற்று வரும் நிர்வாகப் பயங்கரவாதமாகவே இதனையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
சட்ட விரோதமாக ஒருவர் மற்றவர் காணிக்குள் நுழைந்தால் அவருக்கு தண்டனை வழங்க சட்டமும் அத்துமீறி நுழைந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்த பொலிசாரும் இருக்கும் நிலையில், சட்டத்தை தன் கையிலெடுத்து நிர்வாணப்படுத்தி மிலேச்சத்தனமாக தண்டனை வழங்கும் அதிகாரத்தை இவரைப் போன்ற அதிகாரிகளுக்கு வழங்கியது யார்? இவர்களை பின்னாலிருந்து வழி நடாத்துவோர் யார்?
கடந்த பயங்கரவாத காலப்பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது இவ்வாறான கொலை வெறித்தாக்குதல் இடம்பெற்றதை இன்னும் நாம் மறக்கவில்லை. அதே பாணியில் தாக்குதல் மேற்கொண்ட இவ்வாறான ஈனப்பிறவிகள் விடயத்தில் தமிழ் சமூகமும் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது.
வீடியோவை பதிவேற்றம் செய்வதை தவிர்ந்துள்ளோம்...
தேவையேற்படின் பதிவேற்றம் செய்யப்படும்.தெகொட்லைன்