ஜனவரி-24 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சேர்ஃப்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான Eng.இஹ்ஸான் ஜவாஸன் இற்கும் கொழும்பை தலைமையகமாக கொண்ட வறுமை பகுப்பாய்வு நிலையத்தின் (CEPA- Centre for Poverty Analysis) மனிதவள நிறைவேற்று அதிகாரி அயோமி நாணயகாரவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் பல தரமான ஆய்வுகளை செய்யும் பல்வேறு துறைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நிபுணர்களை கொண்டு இயங்கும் வறுமை பகுப்பாய்வு நிலையம் (CEPA- Centre for Poverty Analysis) மேற்கொள்ளும் ஆய்வுகள் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அரச தாபனங்கள், சர்வதேச அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்கு சென்றடைகின்றன. குறித்த ஆய்வு நடைபெற்ற பிரதேசம் ஏதோ ஒரு விதத்தில்
பயனடைய வேண்டும் என்ற நோக்கில் வறுமை பகுப்பாய்வு நிலையம் பல்வேறு விதமாக செயற்படுகிறது.
தோப்பூர் பிரதேசம் உட்பட திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பின்வரும் விடயங்கள் இன்றைய கலந்துரையாடலில் Eng.இஹ்ஸான் ஜவாஸன் அவர்களினால் முன்வைக்கப்பட்டன.
1)வறுமை
2)அடிப்படை வசதிகள் இல்லாத பிரச்சினை
3)தொழில் இல்லாத பிரச்சினை
4)பெளதீக வளங்களின் பற்றாக்குறை
5)ஒவ்வொரு தொழில் துறையிலும் நவீன தொழிநுட்பம் இல்லாத பிரச்சினை
6)உட்கட்டமைப்பு பிரச்சினை
7)வைத்திய சேவை மற்றும் சுகாதார துறையில் காணப்படும் தேவைப்பாடுகள்
8)போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் தரமற்ற வீதிகள்
9)வடிகாண் மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்பான பிரச்சினை
10)தரமற்ற மற்றும் திட்டமிடல் இல்லாத அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள்